‘தலைவி’ படத்திற்காக என்னை ரகசியமாக பாராட்டியவர் இவர்தான்: போட்டுடைத்த கங்கனா

kangana
‘தலைவி’ படத்திற்காக என்னை ரகசியமாக பாராட்டியவர் இவர்தான்:
siva| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:02 IST)
கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரை பார்த்த பலரும் கங்கனா ரணாவத் நடிப்பை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு இந்தி வெளியாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஜெயலலிதா போலவே கங்கனா வாழ்ந்துள்ளார் என்றும் அதே போல் எம்ஜிஆர் போலவே அரவிந்த்சாமி வாழ்ந்துள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன
இந்த நிலையில் ‘தலைவி’ திரைப்படத்தை பார்த்து நடிகர் அக்ஷய்குமார் என்னை ரகசியமாக பாராட்டி உள்ளார் என்று கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோனே உள்ளிட்டோர் படங்களை வெளிப்படையாக என்னுடைய படத்தை அவரால் பாராட்ட முடியாது என்றும் ஏனெனில் மும்பை திரை உலகம் ஒரு மாஃபியா கேங் என்றும் குறிப்பிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :