திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:03 IST)

கனடா குடியுரிமை பெற்றது எதனால்?... நடிகர் அக்‌ஷய் குமார் விளக்கம்!

கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பல கருத்துகளைப் பேசி வரும் நிலையில் அவர் கனடா நாட்டு குடியுரிமை மட்டும் வைத்திருந்தது பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து சமீபத்தில் அவர் இந்திய குடியுரிமையைப் பெற்றார். இப்போது தான் ஏன் கனடா குடியுரிமை பெற்றேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் “அப்போது என் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆகின. 10 படங்களுக்கும் மேல் ப்ளாப் ஆனதால் நண்பர்கள் கனடாவுக்கு அழைத்தனர். அங்கு கார்கோ பிஸ்னஸ் செய்யலாம் என்று அழைத்தனர்.

அதனால்தான் நான் கனடா பாஸ்போர்ட் எடுத்தேன். ஆனால் நான் கனடாவுக்கு சென்றே 8 வருடங்களுக்கு மேலாகிறது. இந்தியாவிலேயே நான் அதிகமாக வரி செலுத்துபவர்களில் ஒருவராக இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.