வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2014 (13:07 IST)

ஜெனிட்டிக் சயின்ஸை உண்மையாக்கி அக்ஷரா - பால்கியின் பாராட்டு

ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ் ஆகியோருடன் அக்ஷராவும் நடித்துள்ளார். சரிகா - கமல் தம்பதியின் இளைய மகளான அக்ஷராவுக்கு இது முதல் படம்.
 
அவரது நடிப்பைக் குறித்து பேசிய இயக்குனர் பால்கி, ஜெனிட்டிக் சயின்ஸை அக்ஷரா தனது நடிப்பின் மூலம் உண்மையாக்கியிருக்கிறார். அவரது பெற்றோர்களின் சிறந்தவை அனைத்தும் அவரிடம் உள்ளது. அமிதாப்பச்சன், தனுஷ் என்ற இரு நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் வேடம் அவருக்கு. அவர் நடிப்பதற்காகவே பிறந்தவர் என்று புகழ்ந்துள்ளார்.
 
ஷமிதாப்புக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.