செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (08:55 IST)

சென்னை சர்வதேச திரைப்பட விழா… இன்று மாலை அக்கா குருவி திரையிடல்!

சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அக்கா குருவி திரைப்படம் இன்று மாலை சென்னையில் திரையிடப்பட உள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற இந்த படத்தை இயக்குனர் மஜித் மஜீது இயக்கியிருந்தார். ஒரே பள்ளியில் படிக்கும் அண்ணன் தங்கை இருவர். தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கோ புது ஷூ வாங்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால் அண்ணன் காலையிலும் தங்கை மதியமும் மாற்றி மாற்றி அண்ணனின் ஷூவைப் போட்டு செல்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இந்நிலையில் பள்ளியில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் வெல்வோருக்கு ஷூ பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அண்ணன்.. வென்றானா? ஷூ கிடைத்ததா ?

இந்த சின்ன கதையை வைத்துக்கொண்டு ஈரானின் அரசியல் சூழ்நிலை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை மிக அற்புதமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர். வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். உயிர், மிருகம் மற்றும் சிந்து சமவெளி ஆகியப்படங்களை இயக்கிய சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள இயக்குனர் விரைவில் படத்தை ரிலிஸ் செய்யும் முனைப்பில் உள்ளார். படத்திற்கு அக்கா குருவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது நடைபெற்று வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழா மூலமாக தன்னுடைய முதல் திரையிடலை சந்திக்க உள்ளது. இந்த படம் இன்று மாலை 3 மணிக்கு சத்யம் திரையரங்கில் வெளியாக உள்ளது.