திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:45 IST)

யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தாரா அஜித்… பிரபல பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!

அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை இப்போது போட் மற்றும் சட்னி சாம்பார் ஆகியவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

கதாநாயகனாக ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வலைப்பேச்சு என்ற யுடியூப் சேனலின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் தன்னைப் பற்றி நெகட்டிவ் செய்தி வெளியிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனக் கேட்டதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

இந்நிலையில் யோகிபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள வலைப்பேச்சு பிஸ்மி “யோகி பாபு சொல்வது பொய்யான ஒன்று. அதற்கு ஆதாரம் இருந்தால் அவர் நிரூபிக்கட்டும். அதே போல யோகி பாபுவை ஒரு ஹீரோ என்னைத் தொடாதெ என்று சொன்னதாக நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவலை சொல்லியிருந்தோம்.

அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை, அஜித்தான். அதுமட்டுமில்லை அந்த தகவலை எங்களிடம் பகிர்ந்ததே யோகிபாபுதான்” எனவும் கூறியுள்ளார்.