வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (14:53 IST)

எந்தவொரு ட்ரோல்லயும் சிக்காம இருந்தேன்… என்னத் தூண்டிவிட்டு செஞ்சுட்டாங்க –எஸ் ஜே சூர்யா கலகல!

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் நடிப்பில் ராயன் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. ஆகஸ்ட் 29 ஆம் தேதி அவர் நடிப்பில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் “எந்த ட்ரோல்லயும் சிக்காம போயிகிட்டு இருந்தேன். ஒரு இண்டர்வியூல என்னப் பாட சொன்னாங்க. நானும் உற்சாகமாகி பாட, அது இண்டர்நெட்ல பயங்கர ட்ரோல் ஆகிடுச்சு. நான் எப்போதும் உஷாரா இருப்பேன். அன்னைக்கு கொஞ்சம் ஏமாந்துட்டேன். வச்சு செஞ்சுட்டாங்க” என ஜாலியாகப் பேசியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவர் தந்த நேர்காணலில் “மயிலிறகே மயிலிறகே’ பாடலை அவர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.