வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (16:04 IST)

பாங்காங் ஷூட்டிங் முடிவு… அஜித்தின் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் தற்போது பாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. ஒரு மாதம் அங்கு நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு கடந்த சில நாட்களாகப் படமாக்கப்பட்டு வந்த ஷூட்டிங் இன்றோடு நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் விரைவில் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெறும் என சொல்லப்படுகிறது