திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (09:22 IST)

துணிவு பொங்கல் ரிலீஸ்… ரசிகர்களே அறிவிப்பு…வைரலாகும் போஸ்டர்!

துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்களே அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. ஒரு மாதம் அங்கு நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பாங்காங் ஷூட்டிங் முடியும் என்று தெரியவந்துள்ளது. அதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் இன்னும் அறிவிக்காத நிலையில் இப்போது ரசிகர்களே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்து எந்தந்த திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலோடு போஸ்டரும் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.