செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:46 IST)

அஜித் ரகசியமாக சமூக வலைதளங்களை கண்காணிக்கிறார்: பிரபல நடிகை கூறிய ஆச்சரிய தகவல்

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதும் அவரது மனைவி ஷாலினியும் எந்த சமூக வலைதளங்களில் இல்லை என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தல அஜித் ரகசியமாக சமூக வலைதளங்களை கண்காணித்து வருவதாக நடிகை பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார் 
 
விஜய் சேதுபதி நடித்த கவண் என்ற திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் நடித்தவர் நடிகை பிரியதர்ஷினி. இவர் இவர் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அஜித் குறித்து தற்போது அவர் கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அஜீத் சத்தமில்லாமல் சமூக வலைதளங்களை கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது