1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:20 IST)

கமலுக்காக அஜித் செய்த தியாகம் – 15 வருடங்களுக்கு முன் நடந்ததை கூறிய இயக்குனர்!

நடிகர் அஜித் தன் படமான அட்டகாசம் படத்தை விட வசூல்ராஜா படம் முக்கியம் என்று சொல்லி இயக்குனர் சரணை அனுப்பி வைத்துள்ளார்.

அஜித்துக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது அட்டகாசம். அந்த படத்தில் அஜித் ஏற்று நடித்திருந்த தூத்துக்குடி டான் குரு வேடமும், தீபாவளி தல தீபாவளி பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அந்த படத்தை அஜித்தின் நண்பரான சரண்தான் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அந்த படத்தை அவர் இயக்கி கொண்டிருந்த போது அவருக்கு கமல்ஹாசனை வைத்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் உடனடியாக ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் வேறு இயக்குனரை வைத்து எடுத்துக்கொள்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இதுபற்றி அஜித்திடம் கூறியுள்ளார் சரண். அப்போது கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு முக்கியமானது எனக் கூறி, தன் படத்தின் தயாரிப்பாளரிடம் சொல்லி ஷூட்டிங்கை தள்ளி வைத்துக்கொண்டு சரணை அனுப்பி வைத்தாராம் அஜித். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார் சரண்.