விரைவில் ‘விவேகம்’ டிரெய்லர்?
விரைவில் ‘விவேகம்’ டிரெய்லர்?
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் டிரெய்லர், விரைவில் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.
அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. இவர்களின் முந்தைய படமான ‘வேதாளம்’ படத்துக்கு, ஒரே ஒரு டீஸரை வெளியிட்டதோடு சரி. நேரடியாகப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். என்னதான் படம் தாறுமாறாக இருந்தாலும், டிரெய்லரை வெளியிட்டிருந்தால் அதையும் கொண்டாடி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க வைத்திருப்போம் என்பது அஜித் ரசிகர்களின் மனக்குறையாக இருந்து வருகிறது.
அந்தக் குறையை, இப்போது தீர்க்க முடிவு செய்துவிட்டாராம் சிவா. அஜித் ரசிகர்களுக்காக ‘விவேகம்’ படத்தின் டிரெய்லரை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சிவா. ஆனால், ‘அவன் இன்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல, அஜித் ஒப்புதல் சொன்ன பிறகுதான் எந்த விஷயமாக இருந்தாலும் முடிவு செய்யப்படும். எனவே, இந்த டிரெய்லர் விஷயமும் அஜித் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கருணை மனுவைப் பரிசீலிக்கும் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள் போல, அஜித்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.