செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (23:19 IST)

அஜித்தின் 'வலிமை' பாடல் 10 மில்லியன் வியூஸ்....தயாரிப்பாளர் டுவீட்

'நாங்க வேற மாதிரி’ பாடல் புதிய சாதனை நிகழ்ச்சியுள்ளது. இதுகுறித்து வலிமை பட தயாரிப்பாளர் டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது . இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்

யுவன் இசையில், விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடல்ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டனர்.
 
திரையுலகில் அஜித் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதே நாளில் இந்த பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இந்த பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.
 
இந்நிலையில், வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை பட அஜித்தின் ஓபனிங் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் தற்போது டிரெண்டிங்கில் நம்பர் 1 எனவும், இப்பாடலை 1 மில்லியன்பேர் லைக் பதிவிட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.#NaangaVeraMaari

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன