1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (21:49 IST)

'நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான்தாண்டா முடிவு செய்யணும்’! அஜித்தின் பஞ்ச் வசனம்

அஜித் படங்களின் பஞ்ச் வசனத்திற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பது தெரிந்ததே. பெரும்பாலும் அவர் சொந்த வாழ்க்கையில் சந்தித்த சோதனையின் பிரதிபலிப்பாகவே அஜித்தின் பஞ்ச் வசனங்களாக இருக்கும். பில்லா 2' படத்தில் இடம்பெற்ற 'என் வாழ்க்கையில ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு நிமிஷமும் ஏன் ஓவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா' என்ற பஞ்ச் வசனம் அவருக்கு மிகப்பொருத்தமாக இருந்தது.



 


இந்த நிலையில் 'விவேகம்' படத்திலும் அதேபோன்ற ஒரு பஞ்ச் வசனம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பஞ்ச வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அது இதுதான்:  ‘‘என்னை தோற்கடிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க. நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான்தாண்டா முடிவு செய்யணும்’’. இதுவே 'விவேகம்' படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக்காக வெளியாகியுள்ளது.

அஜித்தை திரையுலகிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி தோற்கடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அவரே விட்டுக்கொடுத்தால்தான் உண்டு' என்பதையே இந்த பஞ்ச் டயலாக் விளக்குகிறது.