வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (13:54 IST)

அஜித்தின் இன்னொரு பன்ச் டயலாக் இதுதான்…

‘விவேகம்’ படத்தில் அஜித் பேசும் மற்றுமொரு பன்ச் டயலாக் வெளியாகி உள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் பன்ச் டயலாக்குகளில் ஒன்றான ‘நெவர் எவர் கிவ் அப்’ பயங்கர வைரலாகிவிட்டது. இந்நிலையில், அடுத்த பன்ச் டயலாக்கும் தெரியவந்துள்ளது. ‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்பதுதான் அந்த டயலாக். “நான் எந்த டயலாக் எழுதினாலும், அதை அவர் ஸ்டைலில் ஈஸியாக டெலிவரி செய்துவிடுவார் அஜித் சார்” என்கிறார் இயக்குனர் சிவா.