புதன், 12 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:21 IST)

10 ஆயிரம் கி.மீ தூரம் பைக் பயணம் செய்யும் அஜித்குமார்!!

நடிகர் அஜித்குமார், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக் ஓட்டியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.

அஜித்குமார் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் ரசிகர்களுக்கு விருந்துவைக்குமளவுக்கு இப்படத்தில் அஜித்குமாரின் பைக் ரேஸ் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்கான தினமும் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வருமென்று ரசிகர்கள் கேட்டாலும் தயாரிபாளர் வக்கீல் சாப் பட்த்தில் பிஸியாக இருந்தாலும்  அஜித் தன் ரசிகர்களுக்கு எதாவதொரு வகையில் தன் புகைப்படத்தையோ அல்லது, தனது டிராம் குழுவினர் குறித்த செய்திகளையோ வெளியிட்டுள்ளார். அதன்படி அஜித்தின் சமீபத்தில் புகைப்படங்கள் நேற்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து நேற்று டிவிட்டரில் Ajith என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனநிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அஜித் ரசிகர்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்துவருகின்றனர்.
.
பைக்ரேஸ் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித்குமார், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக் ஓட்டியுள்ளார் என த் தகவல்கள் வெளியாகிறது.

மேலும், தற்போது  வட இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்திலிருந்து சென்னைவரைக்கும் அஜித்குமார் பைக்கிலேயே பயணம் செய்து இந்தப் 10 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை நிறைவு செய்யவுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,வலிமை படத்தின் ஷூட்டிங் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின் வெளியாகும் எனத் தெரிகிறது.

படம் ரிலீசாவதில் தாமதமானாலும்கூட, அஜித் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் தங்களுக்கு ஆதவு தருவதாக அஜித் ரசிகர்கள் ஆறுதலைடைந்துள்ளனர்.