புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (18:14 IST)

புரமோஷனுக்கு தயாராகிவிட்டோம்: ‘வலிமை’ படம் குறித்து அப்டேட் தந்த யுவன்!

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஒரே ஒரு சேஸிங் ஆக்ஷன் காட்சி மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதாகவும் விரைவில் வெளிநாட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் புரமோஷனை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக யுவன்சங்கர்ராஜா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் பாடல்களை வெளியிட தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அடுத்த கட்டமாக இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தான் தொடங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து வலிமை படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறப்படுகிறது