1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (18:53 IST)

’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பொங்கல் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது 
 
இந்த வீடியோவில் அஜித் பைக் சேஸிங் காட்சி, ஆவேசமாக வசனம் பேசும் காட்சி, வில்லன் கார்த்திகேயாவின் சவால் விடும் காட்சி, ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு பைக்கில் தாவும் காட்சி ஆகியவை உள்ளன 
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.