செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (15:15 IST)

‘வலிமை’ அப்டேட் தந்த போனிகபூர்: அஜித் ரசிகர்கள் குஷி

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அஜித்தின் பிறந்த நாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. இதனை அடுத்து தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்களுக்கு அப்டேட்டை கொடுத்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் 
 
இதனை அடுத்து இதுநாள்வரை போனி கபூரை திட்டிக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் தற்போது அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அஜீத்தின் 50வது பிறந்தநாளை ஏற்கனவே வெகு சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அதே தினத்தில் வெளியாவதால் இரட்டை மகிழ்ச்சியுடன் அஜித் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது