வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (19:09 IST)

அஜித்திற்கு போட்டி விஜய் இல்லை ...இந்த நடிகர் தான் ! பயில்வான் ரங்க நாதன் !

Vijay Ajith
தமிழ் சினிமாவில்  அஜித்திற்குப் போட்டி, விஜய் இல்லை. இந்த நடிகர் தான் என பிரபல நடிகர் பயில்வான் ரங்க நாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: தமிழ் சினிமாவில், அஜித் – விஜய் இடையே போட்டி இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அஜித்- விக்ரம் இடையே தான் போட்டியுள்ளார்.

சீயான் விக்ரம், பாலா இயக்கத்தில், வெளியான சேது படம் அவரது  நடிப்பை வெளிப்படுத்தியது. அஜித்திற்கு காதல் கோட்டை படம் அக்த்தியன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

அஜித்திற்கு சிட்டிசன் என்றால், விக்ரமிற்கு சாமுராய்.  அதேபோல், ஹரியின் இயக்கத்தில். விக்ரம்  நடித்த  சாமி படம் சூப்பர் ஆனது, அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான  ஆஞ்சநேயா சரியாக போகவில்லை என்றாலும்  இருவருக்கும் இடையே போட்டி.  இருவரும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை செய்தனர்.
payilvan ranganathan

விக்ரமுக்கு அந்நியன் என்றால், அஜித்திற்கு வரலாறு என இருவரும் சரிக்கு சமமாய் இருந்தாலும், அஜித்திற்கு போட்டியாக விஜய் போட்டியாளராக  ரசிகர்களால் கருதப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.