ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (08:02 IST)

96 படத்தின் ரீமேக்கில் அஜித் பட நடிகை!!

தமிழில் மிகப்பெரிய ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை பாவனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
நடிகர் விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 96. பள்ளி வயது காதலை உணர்வுப்பூர்வமாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் 96 திரைப்படம் 99 என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை பிரீத்தம் குப்பி இயக்குகிறார். விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடிக்கிறார். திரிஷா கேரக்டரில் நடிகை பாவனா நடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை பாவனா, 99 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.