வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:42 IST)

அஜித் ரசிகர்களை ஒரே வரியில் தாக்கிய காஜல்!!

நடிகை காஜல் அகர்வால் அஜித்தை ஒரே வரியில் புகழ்ந்துள்ளார். இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


 
 
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் இரு நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் அஜீத் மற்றும் விஜய். இருவரின் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். 
 
இந்நிலையில் விவேகம் படத்தில் காஜல் அகர்வால் கெட்டப்புடன் கூடிய ஸ்டில் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது இது அஜீத் ரசிகர்களால் டிரெண்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
காஜல் அகர்வாலின் புகைப்படத்தை விட, அவர் அதனுடன் அஜித்தைப் பற்றி கூறியுள்ள விஷயம் தான் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி அதனை டிரெண்ட் ஆக்கியுள்ளது.
 
”திறமையின் ஒட்டுமொத்த உருவம் தான் அஜீத்” என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.