1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2024 (09:10 IST)

க… ளே அஜித்தேக்குப் பதில் வேறு கோஷம்… அடங்காத அஜித் ரசிகர்கள்!

சமீபகாலமாக அஜித் ரசிகர்களின் ஒரு கோஷம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் ‘கடவுளே அஜித்தே’ என கோஷம் போட்டு அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பி வந்தனர். ஒரு ஜாலியான நிகழ்வாக தொடங்கிய இது, பொருத்தமற்ற இடங்களில் எல்லாம் எழுப்பப்பட்டு ஒருவகையான அருவருப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதைக் கண்டிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “'க..... . அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.” எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் அஜித் ரசிகர்கள் அதைக் கேட்பதாக இல்லை. கடவுளே அஜித்தே என்பதற்கு பதிலாக தெயவமே அஜித்தே உள்ளிட்ட சில வேறு கோஷங்களை சொல்லி இன்னும் அந்த அட்ராசிட்டியைத் தொடர்ந்தபடிதான் உள்ளனர். ரசிகர்களின் இந்த பொறுப்பற்ற செயல் எப்போது நிற்குமோ தெரியவில்லை.