1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (20:38 IST)

கடவுளே அஜித்தே.. அஜித் விடுத்த வேண்டுகோள்.. ரசிகர்கள் திருந்துவார்களா?

அஜித்தை அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக "கடவுளே அஜித்தே" என்று குறிப்பிடுவதை அடுத்து, அதை தவிர்க்க வேண்டுமென்று அவர் தனது ரசிகர்களுக்கு அன்புடன் கோரிக்கை விடுத்துள்ள ஒரு அறிக்கை தற்போது இணையத்தில் பரவுகிறது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில்,அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க..... . அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. 
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
 
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
 
வாழு & வாழ விடு!
 
அன்புடன்
அஜித் குமார்
 
 
இவ்வாறு அஜித்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran