இதெல்லாம் ஒரு அப்டேட்டா? லைகா நிறுவனத்தை கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்..!
இன்று மாலை 4.33 மணிக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தான் அறிவிக்கப்பட்ட இருப்பதாக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் இந்த படத்தில் நடிக்கும் இரண்டு நடிகர்கள் குறித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து இதெல்லாம் ஒரு அப்டேட்டா என லைகா நிறுவனத்தை ரசிகர்கள் கலாய்த்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த அப்டேட்டில் நடிகர்கள் சஞ்சய் சாரா மற்றும் தசரதி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அஜித் மற்றும் திரிஷா குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் அல்லது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர்கள் நடித்தவர்களின் அறிவிப்பை வெளியிட்டு அப்டேட் என்ற பெயரில் ஏன் சோதனை செய்கிறீர்கள் என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
Edited by Mahendran