திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (11:27 IST)

வாலி படத்தில் எஸ் ஜே சூர்யா எழுதிய சூப்பர் சீன் – நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்த் அஜித்!

1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். அதன் பிறகு வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் உருவானார். எஸ் ஜே சூர்யாவின் சிறப்பே, அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்குள் அவரின் ஜாடை பெரிய அளவில் தெரியும் என்பதே. குஷி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு கிட்டத்தட்ட எஸ் ஜே சூர்யாவின் உடல் மொழியை ஒத்திருக்கும்.

இந்நிலையில் இந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவரும், தற்போது நடிகராகவும் வலம் வரும் மாரிமுத்து வாலி படத்தில் எஸ் ஜே சூர்யா எழுதிய ஒரு சூப்பர் காட்சியை சிலாகித்து பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் “ அந்த படத்தில் சிம்ரன் அண்ணன் யார் தம்பி யார் என புரியாமல் தவிக்கும் போது அதைப் புரிந்துகொள்ளும் தம்பி அஜித், மீசையை ஷேவ் செய்துவிட்டு வந்து சிம்ரனிடம் காட்டுவார். இனிமேல் உனக்கு குழப்பம் இருக்காது என சொல்வார். ஆனால் அந்த காட்சிக்கு ட்விஸ்ட்டாக அண்ணனான வில்லன் அஜித்தும் மீசையை எடுத்திருப்பார். அதைத் தவறாக புரிந்துகொள்ளும் தம்பி அஜித், தன் அண்ணனும் தனக்காக இப்படி மீசையை எடுத்து என நினைத்து சிரிப்பார். ஆனால் சிம்ரனுக்கு அவனும் எதற்காக மீசையை எடுத்துள்ளான் என்பது தெரியும். இந்த சீன் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும், அஜித் பல படங்களில் நடித்து வந்ததால் மீசையை எடுக்க மறுத்துவிட்டார். இப்படி பல சூப்பர் சீன்கள் படத்தில் எடுக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.