திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:47 IST)

நெல்லை பேருந்து நிலையத்தின் மேலே வாலிபர் குதித்து தற்கொலை முயற்சி!

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை பில்டிங் மேலே ஏறி ரகுவரன் என்ற வாலிபர் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். 
 
சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே வலை விரித்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர்.
 
பின்னர் விசாரணை செய்ததில், தான் வேலை செய்த இடத்தில் சம்பளம் ஒழுங்காக தராததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.