திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (23:25 IST)

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சகோதரிகளை வாழ்த்திய அஜித்!

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகளை அஜித் பாராட்டியுள்ளார்.

சென்னை ஆவடி அருகேயுள்ள வீராபுரத்தில் மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் போட்டி மற்றும் தென்மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 25 மீட்டர்  22 ஸ்போர்ட் பிஸ்டல் தனித்திறன் போட்டியில் ராகவி தங்கப்பதக்கம் வென்றார். 

இவரது சகோதரியும் பதக்கம் வென்றார். எனவே இவர்கள் இருவரும் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கிசுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற ராகவி, ரசிகா ஆகிய இருவருக்கும் நடிகர் அஜித்குமார் பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.