1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (12:19 IST)

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி.. என்ன ஆச்சு?

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து அஜய் தரப்பினர் கூறியபோது வழக்கமான உடல் பரிசோதனைக்காக தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலைக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Edited by Mahendran