1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:31 IST)

கோப்ரா ரிலீஸ் தேதி: அஜய்ஞானமுத்து கொடுத்த அப்டேட்!

cobra
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. 
 
ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இதன் காரணமாகத்தான் சுதந்திரதின விடுமுறையில் கார்த்தியின் விருமன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார் 
 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது