செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 20 மே 2017 (07:14 IST)

அசத்தும் கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா: வாயை பிளந்த வெளிநாட்டினர்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா, திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டபோதிலும் அவருடைய அழகும் கவர்ச்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை என்பது தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் அணிந்து வரும் உடைகளில் இருந்து தெரிய வருகிறது.



 


எந்த கவர்ச்சி உடை அணிந்தாலும் சரியாக பொருந்தும் வகையில் அவரது உடல்வாகு இருப்பதாக இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு திரையுலகினர் வாயை பிளந்து நிற்கின்றார்களாம். ஐஸ்வர்யாவைவிட இளமையான தீபிகா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இந்த விழாவில் கவர்ச்சி கடலில் மூழ்கி அனைவரையும் கவர்ந்த போதிலும் ஐஸ்வர்யாராய்க்கு உள்ள கிரேஸ் எவருக்கும் இல்லை என்ற விமர்சனமே எழுந்துள்ளது.

கடந்த 16 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா, நேற்று வெள்ளை நிற கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை நோக்கி ஒரு பிளையங் கிஸ் கொடுத்தாரா பார்க்கலாம், கைதட்டல் விண்ணை பிளந்தது. என்ன இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட் தான்