புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (20:51 IST)

ஜிவி பிரகாஷ் படத்தில் திடீரென இணைந்த ஐஸ்வர்யாராய்

முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'சர்வம் தாளமயம்' படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

சர்வம் தாளமயம் படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இசை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த ஒவ்வொரு பாடலும் வெகு சிறப்பாக வந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் நாளை வெளிவரவுள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடலை நடிகை ஐஸ்வர்யாராய் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை இயக்கிய ராஜீவ் மேனனின் முந்தைய படமான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.