1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (16:21 IST)

லால் சலாம் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் பாட்ஷா படத்துக்குப் பிறகு முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் 20 முதல் 30 நிமிடங்கள் வரும் வரை என சொல்லப்படுகிறது.