இப்படி திறந்துக்கிட்டு வந்தா நான் என்ன ஆகிறது...? அட்டை படத்திற்கு வித விதமா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக க/பெ. ரணசிங்கம் படத்தில் வேற லெவல் நடிப்பை கொடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் அதை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் நடிப்பால் செதுக்கி வடிவமைத்துவிடுகிறார்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இந்த பொக்கிஷத்தை விருப்பு வெறுப்பு இன்றி ஒட்டுமொத்த மக்களும் தங்களது பேவரைட் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்ப்போது பிரபல நாளிதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு அழகழகா போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.