திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (17:45 IST)

இதுக்கு பேரு புடவையா? ஐஸ்வர்யா ராஜேஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளரானார்.


 
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் மற்றும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட கனா போன்ற படங்களில் நடித்து தொடர் ஹிட் அடித்ததுடன் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையானார்.
 
தமிழ் பெண்ணான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாராவிற்கு அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அந்தளவிற்கு டஜன் கணக்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்அவருக்கு குவிந்து வருகிறது. 


 
கோலிவுட் சினிமா மட்டுமின்றி டோலிவுட்டில் நடிக்கவிருக்கும் அவர் சமீப காலமாக அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்டைலிஷ் பேஷன் உடை என்று கூறி  வித்யாசமான புடவை அணிந்து படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். அதில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அதற்கு மேல் புடவைக்காட்டியுள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.