1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (13:37 IST)

தமிழில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் தமிழில் நடிக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.


 

உலக அழகி பட்டம் பெற்றவரான ஐஸ்வர்யா ராய், தமிழிலும் நடித்துள்ளார். அவர் நடித்து தமிழில் கடைசியாக வெளியான படம் ‘ராவணன்’. 2010ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. 7 வருடங்கள் கழித்து மறுபடியும் தமிழில் நடிக்கப் போகிறார் ஐஸ்வர்யா ராய் என்கிறார்கள்.

‘குரு’, ‘இருவர்’, ‘ராவணன்’ படங்களைத் தொடர்ந்து, மறுபடியும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது. தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஐஸுக்கு ஜோடியாக அபிஷேக் நடிக்கிறாரா, இல்லை வேறு யாராவது நடிக்கிறாரா என்பது விரைவில் தெரியவரும்.