1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (13:17 IST)

ஐஸ்வர்யா ராய் நடித்த வேடத்தில் சஞ்சனா சிங்

ஐஸ்வர்யா ராய் நடித்த வேடத்தில் சஞ்சனா சிங்

சஞ்சனா சிங் என்றால் கட்டற்ற கவர்ச்சிதான் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும்.


 


இனி கொஞ்சம் பயத்தையும் அந்தப் பெயர் உருவாக்கும். ஆம், நெகடிவ் வேடங்களில் நடிக்கிறார் சஞ்சனா.
 
இந்தியில் வெளியான காக்கி படத்தை தழுவி தமிழில் ஒரு படம் தயாராகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சேகர் என்பவர் இயக்க, அஞ்சலி பிரதான வேடத்தில் நடிக்கிறார். வில்லனின் தோழியாக ஐஸ்வர்யா ராய் நடித்த நெகடிவ் வேடத்தில் சஞ்சனா சிங். 
 
தனது மீதிருக்கும் கவர்ச்சி இமேஜை இந்தப் படம் போக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த சஞ்சனா, இந்தப் படத்திற்குப் பிறகு வித்தியாசமான வேடங்கள் தன்னைத் தேடி வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
மேலும், ஒரு டிவி ரியாலிட்டி ஷோவிலும் சஞ்சனா சிங் பங்கு கொள்ளவிருக்கிறார்.