1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (22:16 IST)

'பாகுபலி'யை அடுத்து மீண்டும் ஒரு பிரமாண்ட வரலாற்று படம்: நாயகி ஐஸ்வர்யாராய்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அனைவரின் பார்வையும் வரலாற்று கதைகள் பக்கம் திரும்பியுள்ளது.



 




நீண்ட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150' என்ற படத்தில் நடித்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சிவி, அந்த படத்தின் வெற்றியை அடுத்து ஒரு வரலாற்று படத்தை தேர்வு செய்துள்ளார்.

உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடிக்கவுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் பொருத்தமானவராக இருப்பார் என்பதால், இது குறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்புக்கொள்வார் என்றே கருதப்படுகிறது.

ஏற்கனவே ஒருசில தெலுங்கு படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா, முதன்முதலாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பார் என்றும் இந்த படம் 'பாகுபலி' அளவுக்கு இல்லையென்றாலும் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.