வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 21 மே 2017 (23:02 IST)

மாமனார் அமிதாப் இடத்தை பிடிக்கின்றார் மருமகள் ஐஸ்வர்யாராய்

பெரிய நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தற்போது வழக்கமாகிவிட்டது. தொலைக்காட்சி பக்கமே எட்டிப்பார்க்காத கமல்ஹாசன் கூட 'பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். ஜூன் 18 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விஜய்டிவி தீவிரமாக கவனித்து வருகிறது.



 


இந்த நிலையில் இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று கோடீஸ்வரன் என்னும் கெளன் பனேகா குரோர்பதி. பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன் மற்றும் ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாராய் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டாரா? என்பது குறித்த தகவல் இல்லை எனினும், இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய தொகை பேசப்பட்டு வருவதால் அவர் நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மாமனார் அமிதாப் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியை மருமகள் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.