திருமணமானவர்கள் யாருமே சந்தோஷமாக இல்லை… ஐஸ்வர்யா லஷ்மி கருத்து!
ஐஸ்வர்யா லஷ்மி தனது தாய்மொழியான மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அதையடுத்து தமிழில் அவருக்கான வாய்ப்பு விஷால் நடித்த ஆக்ஷன் படம் மூலமாக வந்தது. அந்த படத்தில் அவருக்கு மிகச்சிறிய வேடமே. அவரை கவனிக்கத்தக்க நடிகையாக்கியது பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்கள். இப்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மருத்துவம் படித்த ஐஸ்வர்யா லஷ்மி எதேச்சையாக சினிமாவில் நுழைந்து இன்று நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் திருமணம் குறித்து கூறியுள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதில் “நான் என்னுடைய இளம் வயதில் திருமணம் குறித்து கனவு கண்டுள்ளேன். ஆனால் இப்போது என் பார்வை மாறிவிட்டது. என்னை சுற்றி இருக்கும் திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியோடு வாழவில்லை. எனக்கு இப்போது 34 வயதாகிறது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரே ஒரு குடும்பம்தான் மகிழ்ச்சியோடு இருக்கிறது. மற்றவர்கள் சமரசங்கள் செய்துகொண்டு வாழ்கின்றனர். இப்போது திருமணம் எனக்கானது இல்லை என்ற புரிதலும் விழிப்புணர்வும் வந்துவிட்டது.” எனக் கூறியுள்ளார்.