சமுத்திரக்குமாரி பூங்குழலியின் லேட்டஸ்ட் மாடர்ன் ட்ரஸ் போட்டோஷூட்!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செலன் 2 படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
சமீபகாலமாக இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றன. அந்தவகையில் இப்போது சிவப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.