ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 மே 2023 (14:28 IST)

நயன்தாரா வாங்கியதாக வெளியான தகவல்… அகஸ்தியா திரையரங்க நிர்வாகம் பதில்!

தண்டையார் பேட்டையால் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அகஸ்தியா தியேட்டர். அன்று முதல் இன்று வரை பல வெள்ளி விழா படங்களைக் கண்ட அந்த தியேட்டர் இப்போது மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தியேட்டரை ஒரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி படங்களை திரையிடுவதைக் காட்டிலும் அதிகமாக கமல் படங்களை திரையிடுவார்கள். அதனால் கமல் ரசிகர்களின் ஆதரவு பெற்ற திரையரங்கமாக அகஸ்தியா இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் லாக்டவுன் போது இந்த திரையரங்கம் முழுமையாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த திரையரங்கை தனது நண்பர்களோடு இணைந்து லீசுக்கு வாங்கி நயன்தாரா நடத்த உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த தகவலுக்கு இப்போது அகஸ்தியா திரையரங்க நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதன்படி “சம்மந்தப்பட்ட தியேட்டர் இருக்கும் இடம் ட்ரஸ்ட்டுக்கு சொந்தமானது. அதனால் நயன்தாரா அந்த இடத்தை வாங்க முடியாது” என விளக்கம் அளித்துள்ளது.