1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (15:58 IST)

மீண்டும் தள்ளிப்போகும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,  தயாரிப்பாளர் எஸ்.தாணு அணி வெற்றி பெற்றது. அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறுவதாக அறிவித்தனர்.

 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கலைப்புலி  எஸ்.தாணு தலைமையிலான வெற்றி பெற்றது. தலைவராக எஸ்.தாணுவும், பொதுச்செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன்  ஆகியோரும், துணைத் தலைவர்களாக பைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக சத்யஜோதி  தியாகராஜனும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்கள். இவர்களின் பதவிக் காலம் இன்றுடன் (ஜனவரி 25) முடிவடைகிறது.
 
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மார்ச் 5ஆம் தேதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். இந்த திடீர் ஒத்திவைப்புக்கான காரணம் குறித்து எந்த  தகவலும் வெளிவரவில்லை.