வாஷிங்டன் பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற சிம்பு-தனுஷ் நாயகி


sivalingam| Last Modified திங்கள், 22 மே 2017 (07:07 IST)
சிம்பு நடித்த 'ஒஸ்தி', தனுஷ் நடித்த 'மயக்கமென்ன' படங்களின் நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா என்ற நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? மேலே சொன்ன இரண்டு படமும் ஊத்திக் கொண்டதால் சினிமாவை விட்டே விலகி போய்விட்ட நடிகை ரிச்சா, வாஷிங்டன் பல்கலையில் பட்டம் படிக்க சென்றுவிட்டார்.


 


தற்போது அவர் எம்பிஏ பட்டத்தை முடித்துவிட்டதாக அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். வாஷிங்டனில் உள்ள புனித லூயிஸ் ஓலின் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் எம்பிஏ முடித்துள்ள ரிச்சா, அங்கேயே வேலையும் பார்த்து செட்டில் ஆகப்போறாராம்.

இந்த பல்கலையில் படித்த அனைவருமே அமெரிக்காவின் உயர்ந்த நிலையில் உள்ளதால் ரிச்சாவுக்கும் பெரிய சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி கோலிவுட் பக்கம் திரும்ப போவதில்லை என்றும் இனி அமெரிக்கா தான் என வாழ்க்கை என்றும் ரிச்சா முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :