1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (16:21 IST)

‘தலைவர் 168’ படத்தில் மீனாவை அடுத்து இணைந்த குஷ்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 168’ என்ற படத்தின் அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக நேற்றும் இன்றும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ’தலைவர் 168’ படத்தில் நேற்று வெளியான அறிவிப்புகளில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மீனா அல்லது குஷ்பு நடிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை மீனா இந்த படத்தில் இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது 
 
இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தில் குஷ்புவும் நடிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக மீனா அல்லது குஷ்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருமே இந்த படத்தில் நடிப்பதால் ரஜினிக்கு இரண்டு ஜோடிகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன