வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (18:17 IST)

மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ்

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்கிறார். இது அவர்கள் இணையும் நான்காவது படம்.


 

 
துரை செந்தில்குமாரை எதிர்நீச்சல் படத்தின் மூலம் இயக்குனராக்கியவர் தனுஷ்தான். எதிர்நீச்சல் படத்தை தனுஷின் வொண்டர்பார் தயாரித்தது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கி சட்டை படம். இதுவும் தயாரிப்பு தனுஷ்தான்.
 
கொடி படத்தை தனுஷ் தயாரித்ததுடன் நடிக்கவும் செய்தார். படம் ஓரளவு பெயரையும், காசையும் வசூலித்தது. தற்போது மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிப்பது என்று தனுஷ் முடிவு செய்துள்ளார். தற்போது ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.