வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (13:52 IST)

1000 நாட்களை கடந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’! தமிழ் சினிமாவில் புதிய சாதனை!

Vinnai Thandi Varuvaayaa

சிம்பு - த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரீரிலீஸாகி 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது.

 

 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்து 2010ல் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த படம் அப்போதைய இளைஞர்களிடையே பிரபலமான காதல் படமாக இருந்தது. இப்போதும் தமிழில் வெளியான முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக உள்ளது.

 

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் மீண்டும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பல திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பல படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், சென்னையில் உள்ள விஆர் மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தினசரி ஒரு காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஓடி வருகிறது.

 

தமிழகத்தில் 700+ நாட்கள் தொடர்ச்சியாக ஓடிய படமாக சந்திரமுகி இருந்த நிலையில் அந்த சாதனையை முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா முறியடித்திருந்தது. தற்போது ரீ ரிலீஸில் 1000வது நாளையும் கடந்து ஓடி வருகிறது விண்ணைத் தாண்டி வருவாயா. இதன் மூலம் ரீ ரிலீஸில் 1000 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

 

Edit by Prasanth.K