விரைவில் Demonte Colony 2 - அருள்நிதியின் அடுத்த ஹிட்!
டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜய் ஞானமுத்து பேட்டியளித்தாவது, முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும். அதில் வந்த கதாபாத்திரங்களும், அவர்களுடன் சில புதிய முகங்களும் வருவர். அதில் சொல்லப்பட்ட வரலாற்றை இப்படத்தில் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திருக்கிறோம். இருப்பினும் அதனுடைய முன்னுரையுடன் அதே தொடர்ச்சியாகவே இப்படம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அருள்நிதி தற்போது தேஜாவு, டைரி, D ப்ளாக் உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். டிமான்டி காலனி 2 படத்துக்கான கதையை அருள்நிதி கேட்டதுமே இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு என சொல்லி, உடனே இதில் இணைந்துவிட்டார் என அஜய் ஞானமுத்து பகிர்ந்துள்ளார்.