விளம்பரம் செய்கிறார் மினி சூப்பர்- புளூ சட்டை மாறன் டுவீட்
நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து, அவரது காலில் விழுந்தது குறித்து, புளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனனர் பி.வாசு. இவர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த நடித்த படம் சந்திரமுகி.
இப்படத்தின் 2 வது பாகத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (செப் 28) வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் படம் வெற்றி பெற வேண்டும் என ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
இன்னொரு மனிதரின் காலில் விழுவதென்பது தனிப்பட்ட செயல். அதையும் போட்டோ எடுத்து மீடியாவிற்கு அனுப்பி விளம்பரம் செய்கிறார் மினி சூப்பர்.
இவராவது வீட்டுக்கு உள்ளே காலில் விழுந்து போட்டா எடுத்தார். அவரோ.. யோகியின் வீட்டு வாசலிலேயே காலில் விழுந்தார்.
பப்ளிசிட்டி தேடுவதில்..தலீவர் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி என்று தெரிவித்துள்ளார்.