1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (06:56 IST)

ஆதிபுருஷ்க்கு குறையும் வசூல்… 6 நாளில் மொத்த வசூல் எவ்வளவு?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் பேன் இந்தியா அளவிலும் உலக அளவிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் முதல் நாளில் 140 கோடி ரூபாய்  வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களில் தலா 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவித்தனர்.

3 நாளில் 340 கோடி வசூலித்த நிலையில் இப்போது படத்துக்கு வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. படம் வெளியாகி 6 நாட்களில் இப்போது 410 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடைசி 3 நாட்களில் சுமார் 70 கோடி ரூபாய் மட்டும் வசூலித்துள்ளது. படத்தின் மீது எழுந்த பல சர்ச்சைகளால் வசூல் குறைந்துள்ளதாக தெரிகிறது.