வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2017 (14:57 IST)

அடம்பிடிக்கும் அட்லீ; ரொம்பவே அப்ஸெட்டான விஜய்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. இந்நிலையில் விஜய் 61 படக்குழு ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாம். மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்பவே மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
 

 
விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. சென்னையில் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்த நிலையில், சென்னையை அடுத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு செல்கிறது விஜய் 61 படக்குழு என்று செய்திகள் வெளியாகின.  ஆனால் படக்குழு முதலில் ராஜஸ்தானுக்கு செல்கிறதாம்.
 
விஜய் 61 படத்தின் தற்போதைய செய்தி என்னவென்றால், இப்படத்தின் பாடல் காட்சிக்காக ராஜஸ்தானின் ஜெய் சல்மாரிலுல்ள பிரம்மாண்ட அரண்மனையில் இப்பாடலுக்கான காட்சியை படமாக்குவதற்காக தற்போது அட்லி, விஜய், நித்யா மேனன்  உள்ளிட்ட படக்குழுவினர் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளனர்.
 
நம்ம ஊர் வெயிலுக்கே தாங்காத நடிகர், நடிகைகள் ராஜஸ்தான் வெயிலையா தாங்குவார். இதனால் படக்குழு வெயிலைக்கண்டு கலங்கி போய்விட்டதாம். ஆனாலும் ராஜஸ்தான் பின்னணியில் பாடலெடுத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து படபிடிப்பை நடத்தி வருகிறாராம் அட்லி, அவருடைய பிடிவாதம் விஜய்யை ரொம்பவே அப்ஸெட் ஆக்கி உள்ளாதாம்.